தானே, ஜுன் 01- பல்வேறு கோரிக்கைகளுக்கு தீர்வு காண வலியுறுத்தி அகில இந்திய விவசாயி கள் சங்கத்தின் தலைமையில் 25,000-க்கும் மேற்பட்ட விவசாயிகள் பால்கர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர். மே 30 அன்று மகாராஷ்டிராவின் பால்கர் மாவட்டத்தின் 8 தாலுகாக்களில் இருந்து நில உரிமைகள், நீர்ப்பாசனம், தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டம், ரேஷன் பொருள் உட்பட பல்வேறு பிரச்சனைகள் தொடர்பாக கோரிக்கை மனு அளிக்க அகில இந்திய விவசாயிகள் சங்கத்தின் தலைமையிலான இந்த மாபெரும் பேரணியில் விவசாயிகள், பழங்குடி மக்கள், பெண்கள், இளைஞர்கள் என 25,000-க்கும் மேற்பட்டோர் பால்கர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திரண்டு, ஆட்சியர் அலுவலக வாயிலை முற்றுகையிட்டனர். மேலும் அகில இந்திய விவசாயிகள் சங்க பிரதிநிதிகளின் தூதுக்குழு மாவட்ட ஆட்சியருடனான பேச்சுவார்த்தை முடியும் வரை மூன்று மணி நேரமாக காத்திருந்து, பால்கர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை திணறவைத்தனர்.
நடவடிக்கை எடுப்பதாக ஆட்சியர் உறுதி
நில உரிமை, வன நிலம், கோவில் அறக் கட்டளை நிலம், இனாம் நிலம், மேய்ச்சல் நிலம் போன்றவை தொடர்பான கோரிக்கை களை கடந்த ஒரு மாதமாக அகில இந்திய விவ சாயிகள் சங்கத்தின் பிரதிநிதிகள் விவசாயி களிடமிருந்து படிவங்களாக நிரப்பி பெற்றி ருந்தனர்; மாவட்ட ஆட்சியரிடம் சமர்ப்பிக்கப்பட்டன. மாவட்ட ஆட்சியர் ஸ்ரீ கோவிந்த் போட்கே மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விவசாயிகள் சங்க பிரதி நிதிகளிடம் நடத்திய இரண்டரை மணிநேர பேச்சுவார்த்தைக்குப் பிறகு நில உரிமைகள், நீர்ப்பாசனம், தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டம், ரேஷன் பொருள் தொடர்பான பல்வேறு கோரிக்கைகளை ஏற்றுக்கொள்வதாகவும், குறிப்பிட்ட கால அளவில் நடவடிக்கை எடுப்பதாகவும் உறுதி யளித்து மூன்று முக்கியமான உத்தர வாதங்களையும் அளித்தார்.
1) வன உரிமைகள் சட்டத்தின் கீழ் நில உரிமை கோரி அளிக்கப்பட்டுள்ள 61 ஆயிரம் மனுக்களின் நிலை என்ன என்பதைப் பற்றி முழுமையான மற்றும் விரிவான விபரம் விவசாய சங்க பிரதிநிதிகளுக்கு அளிக்கப்படும்.
2) விவசாய சங்க பிரதிநிதிகளால் சமர்ப்பிக்கப்பட்ட பல்வேறு வகையின, ஆயிரக்கணக்கான நில உரிமை விண்ணப் பங்கள் கிராம வாரியாக பரிசீலிக்கப்பட்டு சாதகமான முறையில் தீர்வு காணப்படும்.
3) நில உரிமையாளர்கள் இல்லாது பழங்குடியினர் காலங்காலமாக விவ சாயம் செய்துவரும் நிலங்களைப் பொறுத்தவரை முதலில் அவர்கள் குத்த கைய விவசாயிகளாகப் பதிவு செய்யப் பட்டு பின்னர் உரிமையாளர்களாகப் பதிவு செய்யப்படுவார்கள். 1940இல் நிகழ்ந்த விவசாயிகள் சங்கத்தின் தலைமையிலான பழங்குடி மக்கள் கிளர்ச்சியின் போது, நூற்றுக் கணக்கான ஏக்கர் ஆக்கிரமிப்பு நில பகுதி களை விட்டு நிலப்பிரபுக்கள் வெளியேறி னர்.
அந்த நிலங்களில் தான் தற்போதும் பழங்குடி விவசாயிகள் உழுது பயிரிட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. பால்கர் மாவட்டப் பேரணிக்கு அகில இந்திய விவசாய சங்க தலைவர் டாக்டர் அசோக் தாவ்லே, விவசாயிகள் சங்க மாநில தலைவர் உமேஷ் தேஷ்முக், மாநில செய லாளர் டாக்டர் அஜித் நாவலே, மாநில துணை தலைவர் கிசான் குஜார், மாதர் சங்க பொது செயலாளர் மரியம் தாவ்லே, சிஐடியு மாநில செயலாளர் வினோத் நிகோல் எம்எல்ஏ, விவசாய சங்க மாவட்ட தலை வர் சந்திரகாந்த் ஆகியோர் தலைமை தாங்கினர்.
மூன்று மாதங்களில் நான்காவது பிரம்மாண்ட பேரணி
மகாராஷ்டிரா மாநிலத்தின் தானே, பால்கர் மாவட்டத்திற்கு உட்பட்ட பகுதியில் கடந்த மூன்று மாதங்களில் மட்டும் அகில இந்திய விவசாய சங்கம், மாதர் சங்கத்தினர் தலைமையில் விவசாயிகள், பெண்கள் நான்காவது முறையாக பிரம்மாண்ட பேரணியை நடத்தியுள்ளனர்.
1. மார்ச் 2023 இல் திந்தோரி - வசிந்த் இடையே நடைபெற்ற பேரணியில் குறுகிய அறிவிப்பில் 1,000 விவசாயிகள் பங்கேற்றனர்.
2. ஏப்ரல் 2023 இல் அகோல் - லோனி வரையிலான பேரணியில் 8,000-க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனர்.
3. கடந்த வாரம் மே 24 அன்று பால்கர் ஆட்சியரகத்தில் மாதர் சங்கத்தினர் தலைமையில் நடந்த மாபெரும் பேரணியில் 12,000 க்கும் மேற்பட்ட பெண்கள் பங்கேற்றனர்.
4. தற்பொழுது மே 30 அன்று அகில இந்திய விவசாய சங்கம் தலைமையில் பால்கர் பேரணியில் 25,000க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனர்.